Pages

Monday, May 21, 2012

இரவீ்ந்திரநாத் தாகூரின் தனிமையில் நடந்து செல்

உன் அறைகூவலை யாருமே கேட்காத போதும்,
உறுதியுடன் தனிமையில் மேலே நடந்து செல்; பயத்திலே
சுவரைப் பார்த்து மற்றவர் குமைந்து நிற்கையில்
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
உன் மனம் திறந்து வெளியே
தனிமையில் நீயே பேசிக் கொள்;
வனாந்திர வெளியை நீ கடக்கும்
பொழுது, மற்றவர் உன்னைத்
தனியே விட்டுப் போனால்,
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
முட்களின் மீது ரத்தக்கறை படிந்த பாதையில்
உறுதியாக நடந்து செல்!
தனிமையில் நடந்து செல்!
புயல் சூழ்ந்த பயங்கர இரவில்
வழிகாட்டும் ஒளியை
மற்றவர் உணக்கு உயர்த்தத் துணியாத போது,
ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே!
அடிக்கும் மின்னலிலும் மழையின்
அவதியிலும் உன் இதயத்தையே
நீ விளக்காக ஏற்றிக் கொள் ---
நீயே உனக்கு வழிகாட்டும்
ஒளியாக விளங்கிக் கொள்!
        --- இரவீந்திரநாத் தாகூர்

Monday, March 5, 2012

பொன்மொழிகள் தினமணி சிறுவர் மலரிலிருந்து

1. பிரார்த்தனைகளை விடவும் மிகவும் உயர்ந்தது பொறுமைதான்! – புத்தர்
2. நிறையப் பேசாதே; நிறைய கேள்! – காந்தியடிகள்
3. ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது! – ஸ்ரீ ராமகிருஷ்ணர்
4. அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை! – அரவிந்தர்
5. கடந்ததைப் பற்றி வருந்தாதே! வருவதைப் பற்றி கற்பனை செய்யாதே! – ஸ்ரீ அன்னை
6. கடுமையாக உழைப்பவனுக்குக் கவலைப்பட நேரமில்லை! – சாணக்கியர்
7. கோபம் அன்பை அழிக்கும். கர்வம் அடக்கத்தைக் கெடுக்கும்! –மகாவீரர்
8. அன்பு இருக்குமிடம் சொர்க்கம்; அன்பு மறைந்த இடம் நரகம்! – திருமூலர்
9. என்னால் இயலாதென்று ஒருநாளுநம் நினையாதே! – விவேகானந்தர்
10. வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே! – டால்ஸ்டாய்
11. நமது வாழ்வை வளமாக்குவது நம்பிக்கைதான்! – நேரு
12. அன்பும் இரக்கமுமே வாழ்க்கையின் அடிப்படை! – வள்ளலார்.
13. நாம் காட்டும் பணிவிற்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக ஏதேனும் ஒரு நன்மையைப் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்போம் எனில் நம்மிடம் உண்மையான அன்பு உருவாகாது. – விவேகானந்தர்
14. சிறுசிறு செலவுளைப் பற்றிக் கவனமாயிரு. ஒரு சிறு ஓட்டையே பெரிய கப்பலை மூழ்கடித்துவிடும். – பெஞ்சமின் பிராங்கிளின்
15. உலகம் களிமண்ணைப் போன்று மிருதுவானது இல்லை. இரும்பைப் போன்று மிகவும் உறுதியானது. நீ உன் விடாமுயற்சியாலும், கடும் உழைப்பாலும்தான் இந்த உலகத்தில் உனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். – எமர்சன்
16. கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். – அரிஸ்டாட்டில்
17. ஒரு மனிதன் செய்யக்கூடிய செயல்கள் அனைத்திலும் மிகமிகச் சிறந்தது, தனக்குத்தானே முற்றிலும் நல்லவனாக இருப்பதுதான். – பிராய்டு
18. பொறாமையினால் ஒருவனின் மனதில் உருவாகும் விஷம் இறுதியில் அவனையே அழித்து விடும். – நியெட்ஸே
19. மன நிறைவுதான் ஒருவனைப் பணக்காரனாக்குகிறது; பேராசைக்காரர்களிடம் இதை எடுத்துச் சொல்லுங்கள். – சாஅதி
20. தன் எடையைப் போல் பத்து மடங்கு அதிக எடையுள்ள தானியத்தை எளிதில் சுமக்கும் எறும்பைப் பார்த்துமா உங்கள் சிந்தனை இன்னும் விழிக்கவில்லை – திரு.வி.க.
21. வாழ்க்கையில் உயரிய குறிக்கோளின்றி அங்குமிங்கு்ம் அலைந்துவிட்டுக் கடைசியில் வெற்றாய் முடிவது மனித வாழ்வாகாது. – அஸ்லாமா இக்பால்
22. வானம் சுருங்கில் தானம் சுருங்கும் – ஔவையார்
23. சீருடன் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் இருப்பதற்கு பணம் அதிகம் தேவைப்படாது. – மகாத்மா காந்தி
24. செல்வங்களின் சுமையை ஏற்றிக் கொண்டு இன்பம் எனும் செங்குத்துப் பாதையில் ஏறிச் செல்வது ஒரு மனிதனுக்குக் கடினம் – முகம்மது நபிகள்
25. தேவைக்கு மிஞ்சிய பொருள் வைத்திருப்பவன் பிறர் பொருளைப் பறித்தவன் – புனித அகஸ்தினார்
26. பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது– பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
27. பணத்தை உங்கள் தெய்வமாக்கிவிட்டால், அது சைத்தான் போல உங்களை ஆட்டிப் படைக்கும் ஹென்றி ஃபீல்டிங்
28. கடன் வாங்குதல் பிச்சையெடுப்பதைவிடக் கீழானது– லெஸ்ஸிங்
29. தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை வாங்கவே பயன்படும் தோரோ
30. விலை குறைந்தது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டாத பொருள்களை வாங்காதே – ஆஸ்கார் ஒயில்ட்

31. சிந்தனை இல்லாத படிப்பு, பயனில்லாத உழைப்பு, படிப்பில்லாத சிந்தனை இவை மூன்றும் ஆபத்தானவை – ஆண்டர்சன்
32. பிறர் குற்றங்களைக் காண முயல்பவன் அரை மனிதன் – வேட்லி
33. நாளை என்பது சோம்பேறிகளின் தினமாகும் – பாபு ராவ்
34. திறமை தானாக வராது; நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும் – ஹேஸ்டர் பீல்
35. தோல்வி என்பது உண்மையை நிலைநாட்ட ஏற்படும் அனுபவம் – பீச்சர்
36. நேர்மையான உழைப்பில் கௌரவம் இருக்கிறது – க்ளீவ் லாண்ட்
37. சுதந்திரமாக இரு. எவரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்காதே சுவாமி விவேகானந்தர்
38. தொண்டு என்பது அடிமை வேலையன்று. அது தெய்வப் பணியாகும் – திரு.வி.க.
39. மனித வாழ்வு என்பது தாமரை இலையில் உருண்டோடும் பனித்துளி போன்றது – தாகூர்
40. உழைத்துப் போராடாமல் வெற்றியை அடைய முடியாது – தாமஸ்
41. படிப்பு என்ற மெழுகுவர்த்திக்கு ஆர்வமே திரி – யாரோ
42. சிந்திக்காமல் பேசத் தொடங்குவது, குறி பார்க்காமல் அம்பை விடுவது போன்றது – ஆஸ்கர் ஒயில்ட்
43. மனிதன் தோல்வியின் மூலமே மேலும் புத்திசாலி ஆகின்றான் – விவேகானந்தர்
44. மன்னிக்கும் உள்ளத்தில் கடவுள் குடியிருக்கின்றார் – குருநானக்
45. நறுமண மலர்களோ மெதுவாக மலரும். களைகளோ வேகமாக வளரும் – ஷேக்ஸ்பியர்
46. நாம் படிக்கப் படிக்க நம்மிடமிருக்கும் அறியாமையை அறிந்து கொள்கிறோம் – ஷெல்லி
47. சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால் பெரிய தவறுகளைத் தவிர்க்க முடியாது – கன்ஃபூசியஸ்
48. சிறிய கடன் கடனாளியை உருவாக்கும். பெரிய கடன் எதிரியை உருவாக்கும் சைரஸ்

49. பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாக அடி – இங்கிலாந்து
50. உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே – டென்மார்க்
51. அதிர்ஷ்டசாலிக்குச் சேவல் கூட முட்டையிடும் – கிரீஸ்
52. நல்ல மனசாட்சி கடவுளின் குரல் – எஸ்தோனியா
53. ஒரு நல்ல நண்பன் நூறு இனத்தார்க்குச் சமம் – பிரான்ஸ்
54. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால், உன் கோழிகளைக் கவனி – அல்பேனியா
55. அறிவு தலைக்கு கீரீடம், அடக்கம் காலுக்குச் செருப்பு – ஹீப்ரு
56. தேவையில்லாததை நீ வாங்கினால் தேவையானதை நீ விற்று விடுவாய் – கிளாரண்டன்
57. ஒழுக்கம் என்பது வெள்ளைக்காகிதம் போன்றது. ஒரு முரை கறை பட்டால் மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது – ஹாவ்ஸ்
58. அதிர்ஷ்டத்தை என்றும் நம்பாதே... அது உன்னை சோம்பேறியாக்கும் – ஆதிசங்கரர்
59. ஆற்றலைக் காட்டிலும் ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணம் – ஒயிட்
60. அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும் மகாவீரர்
61. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே ஜார்ஜ் எலியட்
62. அறிவின்மை கேவலம். அதைவிடக் கேவலம் அறிய மனமில்லாமை – செஸ்டர்பீல்டு

63. மௌனம் என்ற மரத்தில் அமைதி எனும் கனி தொங்கும் – பாஸ்கல்
64. நல்ல செயலுக்கு வட்டி கிடைக்கும் – மில்டன்
65. விடுதலை பெறும்போதுதான் உண்மையைக் காண முடிகிறது – தாகூர்
66. கடமையைச் செய்யத் துணிவுடன் இரு. அதுவே உண்மையான வீரத்தின் சிகரம் – சிம்மன்ஸ்
67. தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, காலால் நடப்பதற்குப் பதிலாக தலையால் நடப்பது போன்றது – எமர்சன்
68. உண்மை ஊடுருவும் சூரிய ஒளி போன்றது. அதையாராலும் மூடி மறைக்க முடியாது – மில்டன்
69. உண்மைக்குப் பகை உள்ளத்தில் தோன்றும் பயம் – ராஜாஜி
70. உண்மையை நேசி, பிழையை மன்னித்துவிடு – வால்டேர்
71. தேவைப்படும்போது தன் முடிவை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவன்தான் அறிவாளி – டாக்டர் ஜான்சன்
72. தம்மிடமுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதே நமக்கு ஏற்படக்கூடிய பெரிய அதிர்ஷ்டமாகும் – கதே
73. தன் கையே தனக்குதவி என்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவுகிறார் – ஃபிராங்க்ளின்
74. மாணவர்களை மதிப்பதில்தான் கல்வியின் ரகசியம் அடங்கியுள்ளது – எமர்சன்
75. அறியாமையிலிருந்ததே பயம் தோன்றுகிறது – எமர்சன்
76. நம்பிக்கையின் திருடன்தான் மேடைப்பிரசங்கி – எமர்சன்
77. உயர்ந்த பண்புக்கு அடிப்படை சிறிசிறு தியாகங்கள் – எமர்சன்
78. சொர்க்கம் என்பது ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு ஏதோ அன்று – எமர்சன்
79. பகையோ, குறைகூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள் – எமர்சன்
80. முதலாவது செல்வம் ஆரோக்கியம் – எமர்சன்
81. ஒரு கணத்தில் இழந்த மானத்தை ஓராயிரம் ஆண்டுகளானாலும் பெற்றுவிட முடியாது – இத்தாலி
82. குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ள கை நோகிறது. அதை கீழே இறக்கினால் மனம் நோகிறது – பொலிவியா
83. கேள்வி கேட்கத் தெரிந்தாலே, பாதி தெரிந்து கொண்டதாக அர்த்தம் – இத்தாலி
84. உழைப்பிற்கு ஓர் உதாரணம் எறும்பு, மற்றொன்று இதயம் – அமெரிக்கா
85. பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள்.ஒன்று தங்குமிடத்தில் மற்றொன்று தங்காது – பிலிப்பைன்ஸ்
86. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது – பெர்னார்ட் ஷா
87. கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று. அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும் – எட்மண்ட் பர்க்
88. ஒழுக்கம் உண்டாக்காத இலக்கியக் கல்வியால் ஒருவித உபயோமும் கிடையாது – காந்திஜி
89. சான்றோன் ஆக்காத கல்வி, சாமர்த்தியமாய்க் கழித்த சோம்பலேயாகும் – போலிங் புரூக்
90. நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் – மூர்
91. தனிமனிதர் வாழ்வை இன்பமுடையதாகவும் நன்மையுடையதாகவும் மாற்றி அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வகுப்பதுமே கல்வி – பெஸ்டலசி
92. ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல. நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி – ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்
93. கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று. ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும் – ரஸ்கின்
94. நூறு முறை உளியால் அடித்தும் சிறு கீறல் கூட ஏற்படாமல் இருக்கும் பாறை, நூற்று ஒராவது முறை அடிக்கிறபோத உடையும். அது கடைசி அடியால் உடையவில்லை. அதற்கு முந்தைய அடிகளால்தான் உடைந்தது. – ஜேக்கப்ரைஸ்

95. பொறுமையோடு இடைவிடாமல் முயற்சி செய்பவனுக்கே வெற்றி கைகட்டிச் சேவகம் செய்யக் காத்திருக்கிறது – ஹெக்டர்
96. கடினமான வேலைகளைச் செய்வதில் மகிழ்ச்சியடைபவர்களே எப்போதும் புகழ் பெறுகிறார்கள் –மகாகவி மில்டன்
97. விசிறியை அசைக்காமல் காற்று வராது. வியர்வை சிந்தாமல் உயர்வு வராது – ஜப்பான்
98. உன்னிடமுள்ள திறமை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் பயன்படுத்தத் தயங்காதே. இனிய குரல் கொண்ட பறவைகள்தான் பாட வேண்டும் என்றால் காடு அமைதியாகி விடும். – ஹென்றி வேன்டேக்
99. நான் எதையும் சாதிக்கக்கூடியவன் என்ற நம்பிக்கையுடன் நீ இருந்தால், பாம்பின் விஷம் கூட உன்னிடம் செயலிழந்துவிடும் – விவேகானந்தர்
100. வாழ்க்கையை வளமாக்க விரும்பினால் காலத்தை வீணாக்காதே. காலத்தால் செய்யப்பட்டதே வாழ்க்கை –ரிச்சர்ட் சாண்டர்ஸ்
101. திறமை எனும் தாயும் உழைப்பு எனும் தந்தையும் பெற்றெடுத்த அழகுக் குழந்தையே புகழ் – பாஸ்கல்
102. எது தேவை? முடிவு செய்ய மனம், வழி வகுக்க அறிவு, செய்து முடிக்க கை – கிரேக்கப் பொன்மொழி
103. ஒருவன் தனக்காக, தன் வாழ்க்கைக்காக உழைக்கும்போது மனிதனாகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும்போதுதான் அவன் உண்மையான மனிதனாகிறான் – கார்ல் மார்க்ஸ்
104. மனித மனத்தில் தோன்றும் நல்ல எண்ணங்களே இந்த உலகின் மிகச் சிறந்த வைரங்கள் – பீட்டர் மார்சன்
105. நான் வாழ்வதற்காக என் பெற்றோர்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நான் முறையாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கே பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். – மாவீரன் அலெக்ஸாண்டர்
106. சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிக்க் கடினமானதாக இருக்காது. – ஹென்றி போர்ட்
107. தவறுகளை ஒத்துக்கொள்ளும் தைரியமும், அவற்ரை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும்.- மாமேதை லெனின்
108. ஒவ்வொரு நல்ல செயலும் நல்ல எண்ணமும் முகத்தில் ஒரு அழகை ஒளியைக் கொடுக்கிறது – ரஸ்கின்
109. வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றந. அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன. – மகாவீர்ர்
110. நல்லவை எங்கே இருந்தாலும் ஒளிவிட்டுச் சுடரும். கெட்டவை இமயமலை உச்சியில் வைக்கப்பட்டு இருந்தாலும் இருள் கவிந்து மறைக்கப்படும் – புத்தர்
111. அரிய சாதனைகள் வலிமையினால் அல்ல, விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன – சாமுவேல் ஜான்சன்

112. பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வ்ந்து சேர்ந்துவிடும் – சுவாமி விவேகானந்தர்
113. தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பத்தைவிட வேறு அவமானமில்லை – காந்தியடிகள்
114. ஆசை புத்தியை மறைக்கும்போது அறிவு வேலை செய்யாமல் போய்விடுகிறது – கவியரசு கண்ணதாசன்
115. நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும் – வள்ளலார்
116. வெற்றி என்பது முழுத் தியாகமும் செய்த பின்னரே கிடைக்க்க்கூடிய ஒன்று – ஜவஹர்லால் நேரு
117. கடின உழைப்பு தெய்வ வழிபாட்டுக்குச் சம்ம் – லால்பகதூர் சாஸ்திரி
118. உண்மை ஒன்றுதான் என்றும் நிலைத்து நிற்கும் தகுதியைப் பெற்றிருக்கிறது – புத்தர்
119. நம்பிக்கை உண்டானால் வெற்றியும் உண்டு – மகாகவி பாரதியார்
120. வாழ்க்கை என்கின்ற மரத்துக்கு இளமையில் கற்பது வேர் போன்றது – திரு. வி.க.

121. எத்தனைப் படிகள் என்று மலைக்காதீர்கள். எல்லாப் படிகளும் கடக்க்க்கூடியவையே – ராமலிங்க வள்ளலார்.
122. ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில்வாழ்க்கையைத் தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது – நேரு

123. ஆற்றலைவிட ஆர்வமே வெற்றிக்கு அடிப்படைக் காரணமாகும் – சார்லஸ் பக்ஸ்டன்
124. சோம்பேறிகள் முன் வைரத்தைக் கொட்டினாலும் கடைக்கு எடுத்துச் சென்று விற்க வேண்டுமே என்று அழுவார்கள் – அரேபியா
125. சம்பாதிப்பதால் ஒருவன் பணக்காரனாவதில்லை. சேமித்து வைப்பதால்தான் அந்த நிலையை அடைகிறான் – பின்லாந்து
126. சிறிய புண்களையும் ஏழை உறவினர்களையும் ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள் – ஸ்வீடன்
127. பசித்தோருக்கு உணவிடுவதே என் மதம். வறியவரிடமும் பாமரரிடமும் அன்புடன் பழகுபவரே என் கடவுள் – விவேகானந்தர்

128. புத்தர்
129. வாழ்க்கையின் நோக்கமே பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
130. ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.
131. ஒருவன் என்ன செயல் செயிகிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.
132. ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்கு தலைவனாக இருக்க முடியாது. தன்னைத்தானே அடக்கி கட்டுப்ப்டுத்த்த் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற் முடியும்.
133. பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே.
134. எந்த செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்த்து என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பின்பற்றுங்கள்.
135. ஆரோக்கியம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாம் இருக்கும் – ஹால்டேன்
136. நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் எல்லா நோய்களுக்கும் ஒரே மலிவான மருந்து – கௌலி
137. நம்பிக்கை பயத்தைப் போக்கும் ஒரு சாதனம் – வில்லியம் ஜேம்ஸ்
138. ஒவ்வொரு தடவையும் விழுவது மீண்டும் எழுவதற்கே என்று நம்புங்கள் – ஷேக்ஸ்பியர்
139. பணத்தின் மீது நம்பிக்கை வைக்காதே. நம்பிக்கை மீது உன் பணத்தை வை – ஹோம்ஸ்
140. நம்பிக்கையை பிறர் தர முடியாது. அது உள்ளத்திலேயே உற்பத்தி ஆக வேண்டும் – காந்தியடிகள்
141. நம்பிக்கை இழந்தவன் பிணத்துக்கு ஒப்பாவான் –வைட் டியர்
142. நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக்கூடாது. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்க வேண்டும் – அரிஸ்டாட்டில்
143. நம்பிக்கைதான் ஏழையை வாழ வைக்கும் – சாணக்கியர்
144. நம்பிக்கை எண்ணற்ற எதிரிகளையும் வென்று விடும் – லாங்ஃபெல்லோ

145. சமுதாயம் என்பது மனிதர்களின் ஒற்றுமைதான் – ரூசோ
146. சிறிய வேலைகளில் அலட்சியம் காட்டுவதால்தான் நாம் பெரிய தவறுகளைச் செய்யக் கற்றுக்கொள்கிறோம். – மதாம் நெக்கேர்
147. இந்தச் சிக்கல் கடினமானது என்று சொல்லாதீர்கள். கடினமாக இல்லாவிட்டால் அது சிக்கலே இல்லை. – ஃபோஷ்
148. வாசிப்பு என்பது மகிழ்ச்சியான உலகத்தின் பக்கம் திறந்து வைக்கப்பட்ட கதவாகும் – மொரியாக்
149. நாம் நான்கு வழிகளில் காலத்தை இழக்கிறோம். ஒன்றும் செய்யாமல் இருத்தல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருத்தல், தவறாகச் செய்தல், காலமற்ற காலத்தில் செய்தல் – வொல்தேர்
150. உயர்ந்த உள்ளங்களின் இரக்க குணமே கருணை – ஷாம்ஃபோர்
151. தன்னால் இயன்றதைச் செய்பவன் வீரன். மற்றவர்கள் அதைச் செய்வதில்லை – ரோமென் ரொலான்
152. எங்கும் இருள் என்பது கிடையாது. அறியாமைதான் இருள். அந்த அறியாமை இருளை விரட்ட நாம் உலகமெங்கும் அறிவொளியைப் பரப்புவோம் – இங்கர்சால்

153. கடும் காற்று மழை கூட்டும். கடும் நட்பு பகை காட்டும்
154. சிரட்டைத் தண்ணீர் எறும்புக்குச் சமுத்திரம்
155. அகப்பை அருசுவை அறியாது
156. காய்ந்த மரம் வளைந்திருக்கும். குணமுடையோர் பணிந்திருப்பர்.
157. நல்ல புத்தகங்களைப் போன்ற நம்பிக்கை இந்தஉலகத்தில் இல்லை –ஆங்கிலப் பழமொழி
158. என் ம்னம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். நான் வாழ்நாள் முழுவதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன் – மாஜினி
159. பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் – சீனப் பழமொழி
160. நான் தெரிந்து கொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் – ஆபிரகாம் லிங்கன்
161. ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். – மார்க்ஸ் அரேலியஸ்
162. மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் – சீனப் பழமொழி
163. ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை – சிசரோ
164. நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராகவே மதிப்பதே இல்லை – மாமாதை லெனின்
165. எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது – பிளேட்டோ
166. அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி – ஜான் மெக்காலே
167. அறிவைப் பெருக்கும் படைக் கருவிகளை நான் நூலகங்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறேன் – இங்கர்சால்
168. கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்துத் திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே – கிப்பன்
169. எனது நூலகமே எனக்குப் போதிய பெருஞ்செல்வமாகும் – ஷேக்ஸ்பியர்
170. நூலகம் ஒரு தனிஉலகம். அதன் உள்ளே சென்றுவந்தால் அறிஞனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம் – அபீப் முகமது
171. நாம் படிக்கப்படிக்கத்தான் நம்மிடமுள்ள அறியாமையைக் கண்டு கொள்கிறோம். – கவிஞர் ஷெல்லி
172. ஒரே புத்தகத்தை ரசிக்கும் இருவருக்கிடையே மலரும் நட்புக்கு இணையானது எதுவும் இல்லை – இர்விங் ஸ்டோன்
173. புத்தகம் என்பது, உற்ற துணைவன், ஒப்பற்ற ஆசான், உயர்ந்த வழிகாட்டி, உயிரினும் மேலான உறவு – ஆபிரகாம் லிங்கன்
174. புத்தகங்கள் மிகவும் விந்தையானவை. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்பவரிடமும் நூற்றாண்டுக்கு முன்னால் வாழ்ந்தவர்க்ளிடமும் நாம் நேரிடையாக உரையாடி இன்பமுறச் செய்பவை புத்தகங்களே – கிங்ஸ்லி
175. ஒரு நல்ல புத்தகம் காலமென்ற கடலில் கலங்கரை விளக்கம் – இ.பி. விப்பல்
176. புத்தகங்கள் இல்லாத வீடு சன்னல்கள் இல்லாத வீடாகும். புத்தகங்கள் இல்லாத வீட்டில் குழந்தைகளை வளர்க்காதீர்கள் – ஹோரேஸ்பான்
177. சோம்பல் அனைத்தையும் கடினமாக்கும். சுறுசுறுப்பு அனைத்தையும் எளிதாக்கும் – ஜப்பான்
178. சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள் – டாரா ஆல்பர்ட்
179. இதயம் மட்டும் உறுதியாக இருந்தால் எலியால்கூடப் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் – கிரேக்கம்
180. உலகமே என் கோவில். நன்மை செய்வதே என் மதம – ஹீன்
181. அன்பு நிறைந்த இன்சொல், இரும்புக் கதவைக்கூடத் திறக்கும் – ஜான் கீட்ஸ்
182. உங்கள் பேச்சைக் கொண்டுதான் உங்கள் அன்பு மதிக்கப்படும். உங்கள் அன்பைப் போலத்தான் உங்கள் நடத்தை இருக்கும். உங்கள் நடத்தையைப் போலத்தான் இருக்கும் உங்கள் வாழ்க்கை – சாக்ரடீஸ்
183. சான்றோர்க்கு அளிக்கும் கௌரவம் கடவுளுக்குச் செய்யும் மரியாதையாகும் – நபிகள் நாயகம்
184. ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது – புத்தர்
185. தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை – ஃபிராங்கிளின்
186. எவரால் மனித இனத்திற்கு நன்மை ஏற்படுகிறதோ அவரே மனிதரில் சிறந்தவர் – நபிகள் நாயகம்
187. ஒரு துளி மையினால் எழுதும் கருத்துக்கள் ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும் – வால்டேர்
188. உண்மையை மறைப்பதும் பொய் சொல்வதற்கே ஒப்பாகும் – ரஷ்யா
189. மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திருக்காமல் எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக் கோட்டையாக வைத்திருக்க வேண்டும் – மு. வ.
190. சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது. சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆராய்ச்சி உண்மையை வளர்க்கிறது. உண்மை எல்லா மூட நம்பிக்கைகளையும் அழிக்கிறது – இங்கர்சால்
191. திறமைசாலிகளை நைல் நதியில் தள்ளினாலும் மீனைக் கவ்விக்கொண்டு கரைக்கு வந்துவிடுவார்கள் – அரேபியா
192. மனிதர்களிலேயே கேவலமானவர்கள் யார் தெரியுமா? பிற மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் தனக்காக வாழும் மனிதர்கல்தான் – ஹெய்ன்
193. மனமே பதற்றமடையாதே! மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கம். தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும் பருவம் வ்ந்தால்தான் பழம் பழுக்கும் – கபீர்தாசர்
194. மனிதன் தன் பெரும்பாலான துன்பங்களைத் தன் பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கிறான் – ரேபியா
195. பலவீனர்கள் பிறரை மன்னிக்கமாட்டார்கள். மன்னிப்பது என்பது வலிமையுடையோரின் குணம் – மகாத்மா காந்தி
196. உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சம்மானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் – சாக்ரடீஸ்
197. வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம் – மகாவீர்ர்
198. வாழ்க்கையில் நீங்கள் அதிகம் பெற விரும்பினால் முதலில் நீங்கள் அதிகமாக்க் கொடுங்கள் – ஸ்டோன்
199. இரக்கத்தை அறிந்தவன் எல்லாம் அறிந்தவன் – பிரெஞ்சு
200. வாழ்க்கை என்பது ஒரு துணிவு மிக்க வீரச் செயல் – ஹெலன் கெல்லர்
201. உங்களுக்கு உதவக்கூடிய கரங்கள் வேறெங்குமில்லை. அவை உங்கள் தோள்களின் மீதுதான் இருக்கின்றன. –லிடர்மென்
202. அனுபவங்கள் எல்லோருக்கும் ஏற்படுகின்றன. ஆனால் அந்த அனுபவங்களால் ஏற்பட்ட படிப்பினையை மறக்காதிருப்பவரே முன்னேற்றமடைகிறார். – ஆல்டல் ஆக்ஸ்லி
203. சிறந்த செயல்களே சிறந்த வழிபாடு – குரு நானக்
204. உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது – ஜார்ஜ் பெர்னாட்ஷா
205. பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும். தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும் – லியனார்டோ டாவின்ஸி
206. இந்த மண்ணில் வாழ்வதற்கு நாம் வாடகை தர வேண்டும். சக மனிதர்ளுக்கு நாம் செய்யும் தொண்டுதான் அந்த வாடகை – வில்பிரட் கிரென் வெல்ட்
207. கடமையைச் செய்யும்போது மகிழ்ச்சியாகச் செய்யவில்லையென்றால், அதன் முடிவும் மகிழ்ச்சியாக இருக்காது – நெப்போலியன் ஹில்
208. நான் துப்புரவுத் தொழிலாளியாக இருந்தாலும்கூட அந்த வேலையிலும் நானே சிறந்த துப்புரவுப் பணியாளனாக இருப்பேன் – சுவாமி விவேகானந்தர்
209. நான் சந்திக்கின்ற மனிதர்களிடமிருந்தெல்லாம் புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் – எமர்சன்
210. தீயவன் மட்டும் தனியாக இருப்பான் – திதெரோ
211. கற்ற்றிந்த மனிதன் என்று யாருமில்லை. கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர் – மரேஷால்
212. மற்றவர்களை ஒதுக்கிவிட்டு எவரும் தன்னை உயர்த்திப் பேச முடியாது – கல்லி புருய்தோம்
213. குற்றவாளி சட்டத்திற்கு அஞ்சுகிறான். நல்ல மனிதன் தன் மனசாட்சிக்கு அஞ்சுகிறான் – உய்கோ
214. எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும். ஆனால் அதற்காக்க் கப்பல் கட்டப்படுவதில்லை. கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது – கிரேஸ் முர்ரே ஹாப்பிர்
215. மிக அதிகமானவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவன்தான் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் – திதெரோ
216. துன்பம் ஒரு பழம் போன்றது. தாங்க முடியாத மெல்லிய கிளையில் கடவுள் அதை வளரச் செய்வதில்லை. – உய்கோ
217. ஒரு மாவீரனையும் ஒரு பெரிய மனிதனையும் எடை போட்டால் – அவர்கள் ஒரு நல்ல மனிதனுக்குச் சம்மாக மாட்டார்கள் – லபுருயேர்
218. இந்த உலகத்தில் நாம் செய்யும் மிகவும் நல்ல பயணம், ஒருவரை நோக்கி ஒருவர் செல்வதுதான் – போல் மொரானோ
219. உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டம் இல்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் – அரிஸ்டாட்டில்
220. முதியோர்களின் அறிவுரைகள் குளிர் காலச் சூரியனைப்போல் சுடாது ஒளிரும்- அ. எர்மான்
221. கட்டுப்பாடும் கவனமும் இன்றி செய்யத் தகாதவற்றைச் செய்பவனும், செய்யத் தக்கவற்றைச் செய்யாது இருப்பவனும், அதிக்க் கேட்டை அடைகிறான் – புத்தர்
222. வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும் போதுதான், நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம் – ஷேக்ஸ்பியர்
223. கற்பனை நம் வாழ்க்கையை உயர்வடையச் செய்கிறது – எமர்சன்
224. நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது – டால்ஸ்டாய்
225. எரிகிற விளக்காக இரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம் – தாகூர்
226. மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று – ஒன்று பகைவனை நண்பனாக ஆக்குதல், இரண்டு கெட்டவனை நல்லவனாக மாற்றுதல் மூன்று படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல் – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்
227. உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள். உனக்குள்இருக்கும் உள்ள இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய் – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
228. நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது – கன்ஃபூஷியஸ்

Thursday, September 9, 2010

Wednesday, July 28, 2010

பொன்மொழிகள் 02

சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
-தாமஸ் ஆல்வா எடிசன்

விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி. அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
-பகவான் இராமகிருஷ்ணர்

உங்கள் கவலைகளை விளம்பரப் படுத்தி பயனில்லை. ஏனெனில் அவற்றை யாரும் வாங்க மாட்டார்கள்.
- லயன்

மேதைக்கு எல்லாம் தெரியும். வாழ்க்கை நடத்த மட்டும் தெரியாது.
- ஓர் அறிஞர்

தவறாக வேண்டுமானால் சிந்தியுங்கள் ஆனால் உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்.
- வெஸ்ஸிஸ்

பணக்காரர்களின் உணவை விட ஏழைகளின் உணவே அதிகம் ருசிக்கிறது. ஏனெனில் ஏழைகள் தான் பசித்து உண்கின்றனர்.
- ரிக் வேதம்

கோபம் என்பது குறைந்த அளவு பைத்தியமே.
- ஹௌஜ்

கதவை தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது.
- பல்கேரிய பழமொழி

புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிப்போகும். புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல.
- பார்பரா சச்மன்

யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள். செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள். எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.
- எமெர்சன்

கோபம் என்னும் கொடிய அமிலமானது அது எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.
- கிளாவுண்டல்

புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்

இல்லை என்று ஒருபோதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன்.
- சுவாமி விவேகானந்தர்

உடைந்த கைகளை கொண்டு உழைக்கலாம்; உடைந்த உள்ளத்தை கொண்டு உழைக்க முடியாது.
- பாரசீக பழமொழி

துடைக்க முடியாதவற்றை தூசியாவது தட்டவேண்டும்.
- ஜெர்மானிய பழமொழி

அது அவரது தனிப்பட்ட கருத்து என ஒதுக்குகிறோம், ஆனால் உலகத்தில் எந்த சீர்திருத்தமும் முதலில் ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தாகத்தான் இருக்கும்.
- எமெர்சன்

உன்னதமான ஒவ்வொரு வேலையும் முதலில் முடியாததாகவே தோன்றும்.
-ஓர் அறிஞர்

ஒரே நேரத்தில் இரு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
- கொரிய பழமொழி

ஒருவன் பணத்தால் நாயை வாங்கிவிட முடியும், ஆனால் அன்பு ஒன்றினால்தான் அதன் வாலை ஆட்டி வைக்க முடியும்.
-ஷெர்லாக் ஹோம்ஸ்

இடைவிடாமல் சிந்திக்கவும், உறுதியாக நிற்கவும் தகுதியுடையவனாகவுள்ள எவனொருவனும் தன்னையறியாமலேயே மேதையாகிவிடுகிறான்.
- கதே

தவறு செய்யாத மனிதன் இல்லை, ஆனால் முட்டாள்கள் அதை பிடிவாதமாக பிடித்துக்கொண்டே இருப்பார்கள்.
-எமெர்சன்

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை சும்மா விடாது.
-சீனப் பழமொழி
பாரதியின் இறுதிப் பேருரை

த. ஸ்டாலின் குணசேகரன்
தினமணி, செப். 11, 2009

தேசியக் கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், தேசபக்தர், அமைப்பாளர், ஆய்வாளர், செயல்வீரர், கதாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனும் பன்முகப் பேராளுமை கொண்ட சுப்பிரமணிய பாரதியார் சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்துள்ளார்.

1921-ம் ஆண்டின் மத்தியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்த பழக்கப்பட்ட யானைக்குத் திடீரென மதம் பிடித்து, வழக்கம்போல் பழங்கள் கொடுக்க வந்த பாரதியை எதிர்பாராத விதத்தில் தனது துதிக்கையால் பிடித்து இழுத்து, கீழே கிடத்திவிட்டது. யானைக்கடியில் கிடந்த பாரதியை அங்கிருந்தோர் பாய்ந்து சென்று இழுத்து வந்து காப்பாற்றினர். இந்தத் திடீர் தாக்குதலால் உருவான அதிர்ச்சியும், ஏற்பட்ட காயங்களால் விளைந்த சுகவீனமும் தொடர் சிகிச்சையால் விடுபட்டது.

குணமடைந்த நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்திலிருந்த பாரதியின் அன்பரும், தேசபக்தருமான வழக்குரைஞர் தங்கப்பெருமாள் பிள்ளையின் அழைப்பின்பேரில், அவர் நடத்திய வாசகசாலையின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்துவதற்காக ஈரோடு சென்றார் பாரதி.

சுதேசமித்திரன் இதழில் "என் ஈரோடு யாத்திரை' என்ற தலைப்பில் தனிக்கட்டுரை வெளியிட்டார் பாரதி.

""இந்தச் சபையின் வருஷோத்ஸவக் கூட்டத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். என்னை ஒரு பிரசங்கம் பண்ணச் சொன்னார்கள். எனக்கு ஒரு விஷயம்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக் கூடுமென்ற விஷயம்'' என்று தனது கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகிறார் பாரதி.

தனது ஈரோடு சொற்பொழிவையே சுதேசமித்திரனின் இன்னொரு இதழில் கட்டுரை வடிவில் எழுதி வெளியிட்டுள்ளார் பாரதி.

""மரணமில்லாமல் வாழ்வது குறித்த என்னுடைய கொள்கையைப் பெரிய மகான்கள் கூடியிருக்கிற இச்சபையில் தர்க்கம் செய்யவே வந்திருக்கிறேன். எனது கொள்கையைத் தக்க ஆதாரங்களுடன் ருஜுப்படுத்தி உங்களுடைய அங்கீகாரம் பெறவே உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்'' என்று உரையைத் தொடங்கியதாக அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதி.

ஹிரணியன், தன் மகன் பிரகலாதனிடத்தில் ""சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே'' என்று கேட்டதையும், அதற்குப் பிரகலாதன் ""நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான்'' என்று பதில் கூறியதையும் குறிப்பிட்டுவிட்டு, அதையொட்டிய தனது கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார் பாரதி.

""வல்ல பெருங்கடவுளில்லா அணுவொன்றில்லை. மஹாசக்தியில்லாத வஸ்துமில்லை சுத்த அறிவே சிவமென்றுரைக்கும் வேதம். வித்தகனாம் குரு சிவமென்று உரைத்தார் மேலோர்...'' என்று அடுக்கடுக்காக ஆதாரக் கருத்துகளை எடுத்துரைத்து ""அத்வைத நிலைகண்டவருக்கு மரணமேது? பார் மீது யார் சாகினும் நான் சாகாதிருப்பேன் காண்பீர்'' என்று தனது பேச்சின் முதல் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் பாரதி.

"நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்' என்று சித்தரெல்லாம் உரைத்திட்டார். இதனையே ஐரோப்பிய ஸயன்ஸ் சித்தாந்தங்களும் தெளிவுபடுத்துகின்றன. சினத்தை முன்னே வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை. சினங்கொள்வார் தம்மைத் தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவாருக்கு ஒப்பாவார். சினம் கொண்டோர் பிறர் மேற்கொண்டு கவலைப்பட்டுத் தாம் செய்தது எண்ணித் துயர்க் கடலில் வீழ்ந்து சாவர். எனவே சினம் காரணமாகக் கவலையும், கவலையினால் சாவும் நேரிடுகின்றன'' என்று சாவிற்கான இன்னொரு காரணத்தை விளக்குகிறார் பாரதி.

""அறக்கடவுள் புதல்வன் என்னும் உதிட்டிரனும் இறுதியில் பொறுமை நெறி தவறி இளையாருடன் பாரதப் போர் புரிந்தான். பாரத நாட்டைப் போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையும் கலியினையும் நிறுத்தி வானம் சேர்ந்தான். போரினால் புவியிலுள்ள உயிர்கள் எல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ?'' என்று போரில்லா உலகம் பற்றி அக்கூட்டத்தில் போதித்தார் பாரதி.

""நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்? என்று விஞ்ஞானியாகிய ஜகதீச சந்திர வசு கூறுகின்றான். ஞானானுபவத்தினாலும் இதுதான் முடிவு. கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்: கொடுங்கோபம் பேரதிர்ச்சி; அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; கவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும். எனவே கோபத்தை வென்றிடவே பிறவற்றைத் தான் கொல்வதற்கு வழியென நான் குறிக்கிறேன்'' என்று ஒரு ஞானிக்குரிய இலக்கணத்துடன் இக்கூட்டத்தில் எடுத்தியம்பினார் இந்த சுப்பிரமணியக் கவிராயர்.

""மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமென்றால் மனையாளும் தெய்வமன்றோ? பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கையில்லை... வீட்டிலுள்ள பழக்கமே நாட்டிலுண்டு. வீட்டினில் தமக்கடிமை பிறராம் என்பவன் நாட்டினில் பிறரை அடிமைப்படுத்த நாடோறும் முயன்று நலிந்து சாவான்'' என்று பெண்ணடிமை புரிவோருக்கு எதிராகப் பிரகடனம் செய்கிறார் பாரதி.

""எல்லா மதங்களின் சாரமும் இதுதான். பூமியிலே கண்டமைந்த மதங்கள் கோடி; யாவினுக்கும் உட்புதைந்த கருத்து ஒன்றே. ஈரமில்லா நெஞ்சுடையார் சிவனைக் காணார்'' என்று மானுட ஒற்றுமையை வலியுறுத்தி "அன்பே அடிநாதம்' என்ற பொருள்பட தனது அன்றைய உரையை அமைத்துக் கொண்டார் மகாகவி.

ஈரோடு நகரில் அன்று நிகழ்த்தப்பட்ட "மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பிலான இந்த உரை அன்று கூடியிருந்தோரை உரக்கச் சிந்திக்க வைத்ததாக அவ்வுரை கேட்டோர் எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழகத்தின் கீர்த்தி மிக்க தேசபக்தக் கவிஞர்களில் சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த ச.து. சுப்பிரமணிய யோகியும் ஒருவர். பாரதியின் ஈரோடு உரையைக் கேட்டவர் அவர்.

பாரதியின் இவ்வுரை குறித்துக் கூறும் யோகியார், ""நெருப்புத் தெய்வத்தை நெஞ்சிலே கொண்ட அவர் பேசும்போது உலகமே "கிடுகிடு' என்று நடுங்குவதுபோல் தோன்றும். மகா காளியே ஆணுருவம் தாங்கி நம்முன் மகா தாண்டவம் செய்வது போலிருக்கும்'' என்று சொல்லிக் கொண்டே வந்து "மூட எண்ணங்கள், முட்டாள் கொள்கைகள், மொண்டி ஞானங்கள், சண்டித் தனங்கள், குற்ற நினைப்புகள், குறுகிய நோக்கங்கள் இவற்றின் மேலெல்லாம் சீறி விழுவார். சள்ளெனக் கடிப்பார். சினத்தோடு சிரிப்பார். வெறி கொண்டவர் போல் குதிப்பார்'' என்று அணுஅணுவாக அனுபவித்து வர்ணிக்கிறார்.

பாரதி பேசத் தொடங்கும் முன் நிலவிய சூழல் குறித்தும், பேச அழைக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்தவை குறித்தும் தனது கட்டுரையில் ஓவியமாகத் தீட்டியுள்ளார் யோகியார்.

""மூன்று மணி நேரம் பண்டிதர்களின் மூச்சுமுட்டும் முக்கடித் தமிழ்; அதுவரையில் பாரதி ஆடவில்லை- அசையவில்லை. சுவாஸம் விட்டாரோ என்னவோ, அது கூடச் சந்தேகம். ஏதோ ஒரு சிற்பி செதுக்கிய ருத்ரன் சிலை அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது; மீசைமுறுக்கும் போதன்று வேறு யாதொரு சலனமும் கிடையாது. ஆனால் அவர் முறை வந்தது; எழுந்தார்... எழுந்தார் என்பது தவறு... குதித்தார். நாற்காலி பின்னே உருண்டது. பேச்சோ? அதில் வாசகசாலையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கிடையாது. பண்டிதர்களின் மூன்று மணி நேரப் பிரசங்கங்கள் முக்கால் நிமிஷ முடிவுரை கூடப் பெறவில்லை. எடுத்த எடுப்பிலேயே "நான் மனிதனுக்கு மரணமில்லை என்கிறேன்' என்றார். அவ்வளவுதான். பாடலானார். அடாடா! அவர் பாடும் போது கேட்க வேண்டும். அது என்ன மனிதன் குரலா? இல்லை இடியின் குரல், வெடியின் குரல், "ஓ ஹோ ஹோ' வென்றலையும் ஊழிக்காற்றின் உக்ர கர்ஜனை; ஆனால் அவைகளைப் போல் வெறும் அர்த்தமில்லாத வெற்றோசையல்ல; அர்த்தபுஷ்டி நிறைந்த அசாதாரண வீர்யத்தோடு கூடிய வேதக் கவிதையின் வியப்புக்குரல்"" என்று வியந்து வியந்து கண்ட காட்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் யோகியார்.

1921-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட சான்றோர்கள் தாம் கூறிய கருத்துகள் குறித்து விவாதித்து ஏகோபித்து அங்கீகரித்ததாகவும், பாரதியாரே பிறகு எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பாரதியின் உரையைக் கேட்ட பெரிய வித்துவான்கள், பண்டிதர்கள், தேச பக்தர்கள் யாவரும் அதே ஈரோடு நகரில் உள்ள வாய்க்கால் கரையில் அடுத்தநாள் இன்னொரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்வதாகவும், அதிலும் பாரதியார் வந்து உரையாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் அதற்குச் சம்மதித்து அக்கூட்டத்தில் "இந்தியாவின் எதிர்கால நிலை' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

ஈரோடு நகரில் நடைபெற்ற இந்த இரண்டு உரைகளுக்குப் பின்னர் சென்னை சென்ற பாரதியார் வயிற்றுக் கடுப்பு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு பெரும் துன்புற்றார். மேலும் மேலும் நலிவடைந்து செப்டம்பர் 11-ம் தேதி பின்னிரவு 1 மணியளவில் பாரதியின் உயிர் பிரிந்தது.

ஈரோடு நகரில் ஆற்றிய உரைதான் பாரதியின் இறுதிப் பேருரை! இந்தியாவின் எதிர்கால நிலையைப் பற்றியே எண்ணி எண்ணி வாழ்ந்த இம்மாபெரும் மனிதனுக்கு மரணமென்பதே இல்லை!

Friday, July 9, 2010

தமிழ் எனும் அரசியல் - வாஸந்தி

தமிழ் எனும் அரசியல்
வாஸந்தி


தமிழன் தனிப்பிறவி என்பதில் சந்தேகமில்லை. தலை நிமிர்ந்து நிற்பவன் தமிழன் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வது தனது முதுகு எலும்பு காணாமல் போனதை மறைக்க. அது காணாமல் போய் வெகுகாலமாயிற்று. தமிழனின் பெருமையைப் பாடி , அவனது சுய மரியாதை உணர்வைத் தட்டி எழுப்பி , தமிழ் மொழி வெறியேற்றி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவை எல்லாமே சித்தாந்தங்களும் இல்லை. புண்ணாக்குமில்லை-வெறும் அரசியல் என்று தொடர்ந்து காட்டிவந்தாலும் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் மூளைச் சலவை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கேனும் அவனைச் செயலிழக்கவைக்கப் போகிறது. சுயமரியாதை என்கிற பெயரில் ஏற்பட்ட இயக்கத்தின் முடிவில் தனி மனித சுயகௌரவத்தை இழந்து நிற்பதைக் கூட அறியாத இளிச்சவாயனாக்கிவிட்ட மூளைச் சலவை. தமிழ்நாட்டில் ஒரு மாற்றுக் கட்சிக்கு இடமே இல்லை என்று நினைக்கும்படியாக திராவிடக் கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன. அதிலும் ஒன்று, வீர்யமற்று ICUவில் கிடக்கும் நிலையில் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களே ஆளுவார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் அது மன்னராட்சி இல்லை. ஜனநாயக முறையிலேயேதான் ஆளுவார்கள். ஒரு அரசப் பரம்பரை உருவாகிவிட்டது. ஆனால் வாரிசு அரசியல் செய்ய அது சங்கர மடம் இல்லை. ஆட்சியை எப்படிப் பிடிக்கமுடியும் , நினைத்த அளவுக்கு ஜனநாயகத்திலும் வாக்குகளை எப்படி அள்ளமுடியும் என்று தெரிந்து வைத்து மக்களின் 'அமோக ஆதரவுடன்’ ஆட்சியைப் பிடிக்கக் காத்திருக்கும் குடும்பம். 40,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்று சொன்னால் 'நம்புங்கள் நாராயணனை' என்று வெளியாகும் ஜோசியக் கணிப்பைவிட மிகத் துல்லியமாகப் பலிக்கும். அதை சாத்தியமாக்கிக்கொள்ள அடித்தளம் அமைக்கத் தெரிந்த பிறகு என்ன சிக்கல் இருக்கமுடியும்?
தமிழன் அதையெல்லாம் துருவிப் பார்க்கவேண்டிய நிலையில் இல்லை. சொரணை என்ற குணத்தை இழந்தும் வெகுகாலமாகிவிட்டது. அவன் ராஜ விசுவாசம் மிக்கவன். அம்மாபெரும் குடும்பத் தலைவர், முத்தமிழ் வித்தகர் மட்டுமில்லை, தமிழ்நாட்டு ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவர். இருக்க நிலமும் தலைக்கு மேல் கூரையும் அவனது உயிர்காக்கும் காப்பீட்டுத் திட்டத்தையும் அளிப்பவர். அவருக்காக ஒரு தொண்டர் கோவில் கட்டுகிறாராம். கண்டிப்பாகக் கட்டவேண்டும். நடிகை குஷ்புவுக்கே தமிழ் மக்கள் கட்டியபோது கலைஞருக்குக் கட்டுவதில் என்ன தவறு? அதை அவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார். கடவுள் போன்றவர். கடவுளைவிட மேலானவர். கடவுளை வேண்டினால்தான் வரம் கிடைக்கும். கிடைக்காமலும் போகும். அவனவனது விதியை, அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. கலைஞரோ நிஜமாகவே வேண்டாமலே ,கேட்காமலே கொடுப்பவர்.

அத்தகைய மாமனிதர் தமிழுக்கு ஒரு விழா எடுக்கிறார். அதற்காக ஒரு பாடலை இயற்றினார். அதன் தலைகால் புரியாமல் போனாலும் தூய தமிழில் எழுதப்பட்ட பாடல். அதை மெருகேற்ற இளைய தலைமுறைக்கேற்றவாறு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து- பாவம் எத்தனை கஷ்டப்பட்டாரோ- மத்திய அமைச்சர் ராசாவின் புண்ணியத்தில் தமிழர்களின் மொபைல் ரிங் டோனாக இலவசமாகக் கிடைத்தது. கோவையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள். மாநாட்டிற்காக. அதை எல்லா தமிழனும் கண்டு களிக்க தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு மூன்று நாள் விடுமுறை கிடைத்தது. எத்தனை கரிசனம் கலைஞருக்கு! பிள்ளைகளுடன் கோவைக்கு ஒரு சுற்றுலா செல்ல எப்படிப்பட்ட வாய்ப்பு! மாநாட்டு ஏற்பாடுகள் தமிழனின் வாயைப் பிளக்க வைத்தன. மாநாட்டுப் பந்தலின் முன் வரிசைகள் முழுவதும் நியாயமாக அரசு குடும்பத்து உறுப்பினர்கள் நிரப்பிக் கொண்டார்கள். அதற்குப் பின்னால் இருந்தவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள். வெகு உற்சாகமாக தொலைக்காட்சி காமிராக்களுக்குக் கையசைத்துக்கொண்டிருந்தார்கள். தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமுண்டா என்பது நிச்சயமில்லை. ஆனால் அவர்கள் தமிழுக்காக வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். விழா நாயகரின் ஆஸ்தான துதிபாடிகள் மேடையில் அவருக்குச் சாமரம் வீசியபடி இருந்தார்கள். தமிழில் புலமை மிக்கவர்கள். தங்கள் புலமையைத் துதிபாடிக் காட்டுவதிலேயே ஆர்வமுள்ளவர்கள். வல்லவர்கள். அரசருக்கு மகிழ்ச்சியை அளிப்பவர்கள். அத்தனை வேலை பளுமிக்க அரசருக்கு அத்தகைய ஆட்கள் அருகில் இருப்பது தேவைதான். அவர்களது துதிபாடல்களே அவரை இன்னமும் மார்க்கண்டேயனாக வைத்திருக்கும் டானிக் என்று வதந்தி. அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனியும் பொடிவைத்துப் பாடும் அவர்களது சொற்களில் கலந்திருக்கக்கூடும். அவர்கள் மொத்தத்தில் பாக்கியசாலிகள். "செம்மொழி சிங்கமே! எங்கள் செல்லச் சிங்கமே! உன்னைக் கும்பிட்டால் ஊரைக் கும்பிட்டமாதிரி!" "தலைவா. நீ சாகா விளக்கு , அகலாவிளக்கு" "சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய் , திரை உலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள், ஆனால் திரை உலகையே கலைஞர் ஜெயித்திருக்கிறார்" போன்ற ரத்தினமாய் ஜொலிக்கும் தமிழ்க்'கவிதைகளை' ஜோடித்து அரசருக்கு சற்றும் அலுப்புத் தட்டாமல் பார்த்துக்கொண்டார்கள். ஒவ்வொரு வரியைக் கேட்கும்போதும் அரசருக்குத் தெம்பு அதிகரித்தது. தாமே ‘தமிழினக் காவலர்’ என்று உறுதி பிறந்தது.
ஆமாம், யாருக்கு நடந்த விழா அது? யாருக்கும் அதைக் கேட்கத் தோன்றக்கூட இல்லை. அது அசம்பாவிதமான கேள்வி. முதல்வர் கருணாநிதியின் படைப்புகளைப்பற்றி 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. அவருடைய மகள் கனிமொழியின் கவிதைகள் பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டின் அழைப்பின் பேரில் வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் , வந்த மிகச் சில சிறந்த ஆய்வாளர்கள் தங்கள் அமர்வுகளில் இருந்த காலி இருப்பிடங்களைக்கண்டு நொந்தார்கள். அவமானப் பட்டார்கள். ஈழத் தமிழ் படைப்பாளிகளைக் காணோம். ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி கொழும்பிலிருந்து வருகை தந்தது இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்று தெளிவு செய்துவிட்டது. அது போதாதா கருணாநிதிக்கு, விஷமிகள் பலரின் வாயை அடைக்க? தமிழின விரோதி என்று அவரைப் பழித்தார்கள்! அவரை. உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று முழங்கியவரை. விரலைக் கீறி தனது குறுதியால் 'தமிழ் வாழ்க' என்று 14 வயதில் சுவரில் எழுதியவரை. தொடர்ந்து தமிழுக்காக, தமிழினத்துக்காக வாழ்பவரை. அஞ்சாநெஞ்சன் அழகிரி ஆங்கிலம் பேசத்தெரியாமல், மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் எல்லோருக்கும் விளங்குகிற மொழியில் நாடாளுமன்றத்தில் பேச இயலாமல் தமிழில் பேச அனுமதியில்லாமல் கூனிக்குறுகி ஓடி ஒளிந்தபோது அவரது தமிழ் ரத்தம் எப்படிக் கொதித்தது என்று யாருக்குத் தெரியும்? தமிழின் பெருமையை, அதன் முக்கியத்துவத்தை அந்தத் தகுதியில்லா வட இந்திய அரசியல்வாதிகள் எப்படிப் புரிந்து கொள்வார்கள்? எப்படியோ செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் செம்மொழி என்பதன் விளக்கம் தமிழனுக்கே தெரியாத நிலையில் வட இந்தியனுக்கு எப்படித்தெரியும்? இப்படிப்பட்ட மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து பாமரத் தமிழனையும் வட இந்திய அரசியல் பெருந்தகைகளையும் அழைத்து அசத்தினால் தமிழுக்கு லாபமோ இல்லையோ, அவருக்கு நிச்சயம் லாபம். பல அரசியல் காய்களை வீழ்த்தும் மிகச் சுலப கோலாகல யுக்தி. அவரது அரசியல் பலம் புலப்படும். தமிழை நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய அந்தஸ்துடன் தேசிய மொழியாக்கும் முயற்சி வெற்றிபெற்றால் அதைவிட தமிழுக்கு சிறந்த தொண்டு எந்தக் கொம்பனும் செய்திருக்கமுடியாது. தனது இலங்கைத் தமிழர் பிரச்சினை அணுகுமுறையை விமர்சிப்பவர்களுக்கும் இது ஒரு பதில். அந்த ஐந்து நாட்களும் கோவை வானம் அதிர்ந்தது - "தமிழ் என்றால் கலைஞர். கலைஞர் என்றால் தமிழ்" என்ற முழக்கத்தில்.
தமிழ் சினிமாக்கள் எல்லாம் தூய தமிழ் தலைப்பில் வருகின்றன. கடைகளின் பெயர்கள் தமிழில். வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழுக்கு மாற்றப்படவிருக்கின்றன. அவரது அரசின்கீழ் மேயரிலிருந்து எல்லா ஊழியரும் தமிழார்வம் மிக்கவர்கள். பெற்றோர்கள் ஆங்கிலப் பள்ளிகளைத் தேடி அலைகிறார்கள். அதற்கு அவர் பொறுப்பில்லை. அவரது மகளே ஆங்கிலப் பள்ளியில் படித்தாள். நல்ல வேளை, அவளால் தில்லியில் அந்தத் திமிர் பிடித்த கூட்டத்தைச் சமாளிக்க அவளது ஆங்கிலம் உதவுகிறது. மற்றவர்கள் தமிழில்தான் படிக்கவேண்டும்- மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் - எல்லாமே. வெளி இடத்தில் எவனும் வேலை கொடுக்கமாட்டான் . வெளிநாட்டுக் கம்பெனிகள் சென்னைக்கு வருவது பொருளாதாரத்துக்கு நல்லது. அவர்கள் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. அதற்குத் தீர்வும் சமாதானமும் வெகு சுலபம். தமிழில் படித்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை. பிரித்தாளும் அரசியலா ? தமிழுணர்வு அற்றவர்கள்தான் அப்படிச் சொல்வார்கள்.
கருணாநிதியின் செயல்பாட்டில் எதுவுமே அரசியல் இல்லை. தமிழினத் தலைவர் தமிழன்னைக்குச் செய்யும் ஒப்பற்ற தொண்டு மட்டுமே. தமிழன்னை எங்கே?
உஷ். ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்க

Sunday, July 4, 2010

கன்ஃப்யூசியஸ் தத்துவங்கள்

சிறந்த ஆட்சி எது ?
மூன்று விஷயங்கள் தேவை.
1. நாட்டில் போதிய உணவு இருப்பு
2. தற்காப்புக்கு ராணுவம்
3. மக்கள் நம்பிக்கை.
ஏதாவது ஒன்றை விடவேண்டுமென்றால்,
ராணுவம்.
இரண்டாவதாக ஒன்றை விட வேண்டுமென்றால்,
உணவு இருப்பு.
காரணம் : உணவு இல்லாவிட்டால் மக்கள் மடிய நேரிடலாம். அப்படிப் பல சமயம் நடந்து இருக்கிறது. இருப்பினும் மறுபடியும் சமுதாயம் துளிர் விடாமலிருந்ததில்லை. ஆனால் மக்கள் வைக்கும் நம்பிக்கையை அரசு இழந்தால் நாட்டின் கதி அவ்வளவுதான்.